உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்30ம் தேதி கடைசி நாள்

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள்30ம் தேதி கடைசி நாள்

சென்னை:செயற்கை அவயங்கள் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், வரும் 30ம் தேதிக்குள், அதிகாரியைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட கலெக்டர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வாயிலாக, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம், நவீன செயற்கை அவயங்கள், இலவசமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை அவயங்கள், இலவசமாகப் பெறுவதற்கு, முட்டிக்குக் கீழ் கால் இழந்தவராக இருக்க வேண்டும்.மாணவ, மாணவியர் மற்றும் பணி புரிபவராக இருக்க வேண்டும். தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்றிருத்தல் வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், குடும்ப அட்டை வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, இலவச உபகரணத்தைப் பெறுவதற்கு, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை, வரும் 30ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு பயனடையலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை