உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 9.21 கோடி ரூபாய் செலவில் 26 வளர்ச்சிப் பணிகள்

9.21 கோடி ரூபாய் செலவில் 26 வளர்ச்சிப் பணிகள்

சென்னை : சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நகராட்சி சார்பில், 9.21 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்ட, 26 வளர்ச்சிப் பணிகளை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். தலைமை செயலகத்திலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில், 3.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 24 மணி நேர அவசரகால மகப்பேறு கவனிப்பு மையம், 1.32கோடி ரூபாய் செலவில், அபுசாலி தெரு, பாஸ்கர் காலனி, இளையா தெரு, படேல் நகர் 4-வது தெரு, லாசரஸ் சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்கள், திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு, எம்.ஆர்.,நகர், பென்ஷனர்ஸ் தெரு, பி.பி.அம்மன் கோயில் தெரு, சமயபுரத்தம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில், 1.42கோடி செலவில் அமைக்கப்பட்ட, உடற்பயிற்சி மையங்கள் ஆகியன, வீடியோ கான்பரன்சிங் மூலம், முதல்வர் ஜெயலலிதாவால் நேற்று திறக்கப்பட்டன.மொத்தம் 8.36கோடியே 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 25 வளர்ச்சிப்பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ