உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஆர்.எம்., பல்கலையில் தொழில்நுட்ப மேலாண்மை விழா

எஸ்.ஆர்.எம்., பல்கலையில் தொழில்நுட்ப மேலாண்மை விழா

சென்னை : 'ஆரூஸ் 2011' எனும் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா, எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நேற்று துவங்கியது.சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், 'ஆரூஸ் 2011' எனும் ஐந்து நாள் தொழில்நுட்ப மேலாண்மை திருவிழா நேற்று மாலை துவங்கியது.'ஏர் பான் சிஸ்டம்ஸ்' மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் இவ்விழாவை துவக்கி வைத்தார். பல்கலை துணைவேந்தர் பொன்னவைகோ, பதிவாளர் சேதுராமன் கலந்து கொண்டனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலை, பீட்டா, ஐந்தாவது தூண் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, இவ்விழாவை நடத்துகிறது.இதில், 'ஆன்-லைன்' விளையாட்டு, இளம் தொழில்முனைவோர் - கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல் உள்ளிட்ட 57 நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.பந்தய கார்களுக்கான சிறந்த சக்கரங்களை வடிவமைத்ததற்காக, 'சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ்' அமைப்பின் பரிசை, எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள் சமீபத்தில் பெற்றனர். அந்த சக்கரங்கள் மற்றும் இப்பல்கலை மாணவர்கள் வடிவமைத்த பெட்ரோல் இன்ஜினில் இயங்கும் கார் ஆகியவற்றை கிறிஸ்டோபர் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி