உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி

ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி

தாம்பரம்:ஊரப்பாக்கம் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர் ஒருவர், எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தார்.இது குறித்து, போலீசார் கூறியதாவது:ஊரப்பாக்கம், எம்.ஜி.,நகரை சேர்ந்தவர் அலிபாபு. இவரின் மகன் அப்துல் பாசிக்,19. மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், அப்துல் பாசிக் சம்பவ இடத்திலேயே இறந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை