உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழை வெள்ள தடுப்பு பாதுகாப்பு பணிகள்: அமைச்சர் ஆய்வு

மழை வெள்ள தடுப்பு பாதுகாப்பு பணிகள்: அமைச்சர் ஆய்வு

சென்னை:மாவட்டப் பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் உபரி நீர் கால்வாய் பகுதிகளில், மழை வெள்ள தடுப்பிற்காக நடக்கும் பாதுகாப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அடுத்து வரும் பருவ மழைக்காலத்திற்கு முன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் மழை நீர் கால்வாய்களை தூர் வாரி சீரமைத்து வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதையடுத்து சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை பாதுகாக்கும் வகையில் 3.60 கோடி ரூபாயில் வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. மதுரவாயல் அருகே நெற்குன்றம் கூவம் ஆற்றுப்பகுதி, கொரட்டூர் ஏரி உள்வாய் பகுதி மற்றும் ஏரியின் உபரி நீர் போக்கி உள்ளிட்ட பல இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில் குமார், கொற்றலையாறு வடிநிலக்கோட்டம் உதவி செயற்பொறியாளர் சேது மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ