உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில்வே காலி பணியிடங்களை நிரப்பக்கோரி டி.ஆர்.இ.யூ., தர்ணா

ரயில்வே காலி பணியிடங்களை நிரப்பக்கோரி டி.ஆர்.இ.யூ., தர்ணா

சென்னை : காலி பணியிடங்களை நிரப்புதல் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்சண ரயில்வே பணியாளர்கள் சங்கத்தினர் (டி.ஆர்.இ.யூ.,), தர்ணா போராட்டம் நடத்தினர். ரயில்வே துறையில் காலியாக உள்ள, 2.54 லட்சம் காலி பணியிடங்களில், பாதுகாப்புப் பிரிவில் காலியாக உள்ள, ஒரு லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்; ஊழல் மீது சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்சண ரயில்வே பணியாளர் சங்கத்தினர் மற்றும் சி.ஐ.டி.யூ., இணைந்து, சென்னை சென்ட்ரலில், தர்ணா நடத்தினர். இதில், சங்கத் தலைவரான ரங்கராஜன் எம்.பி., தர்ணாவை துவக்கி வைத்துப் பேசினார். இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் இளங்கோவன், பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை