உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆரம்ப சுகாதார மையத்திற்கு ரூ.1.46 கோடியில் கட்டடம்

ஆரம்ப சுகாதார மையத்திற்கு ரூ.1.46 கோடியில் கட்டடம்

திருவொற்றியூர், திருவொற்றியூர் 4வது வார்டில், ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார மைய கட்டடம் செயல்படுகிறது. திருவொற்றியூர்மேற்கு பகுதியைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.கட்டடம் கட்டி, பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து மிகவும் மோசமாக காணப்பட்டது. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன் கட்டடத்தை இடித்து, புது கட்டடம் கட்டத்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.அதன்படி, 1.46 கோடி ரூபாய் மாநகராட்சி நிதியில், ஆரம்ப சுகாதார மையத்திற்கு புது கட்டடம் கட்டும் பணிகள் நேற்று துவங்கின. இதற்கான பூஜையில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.  அதேபோல், 14வது வார்டு, தியாகராயபுரம் இரண்டாவது குறுக்கு தெருவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 31.20 லட்ச ரூபாய் செலவில், புது அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணி துவங்கியது.இதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற, எம்.எல்.ஏ., அங்கன்வாடியில் பயிலும் குழந்தையின் கையால், அடிக்கல் எடுத்து வைத்து பணியை துவங்க செய்தார். இதில், கவுன்சிலர் பானுமதி, மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை