உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் காரிய மண்டபம் கட்டும் பணி நிறுத்தம்

கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் காரிய மண்டபம் கட்டும் பணி நிறுத்தம்

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 175வது வார்டில், காரிய மண்டபம் கட்ட, 21 லட்சம் ரூபாய் நிதியை மாநகராட்சி ஒதுக்கியது.ஆனால், முறையான இடம் தேர்வு செய்யப்படாமல், காலியாக உள்ள இதர துறைகளின் இடத்தில் கட்டும் வகையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு துறையின் காலி இடத்திலும், காரிய மண்டபம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இங்கு, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள கழிவுநீர் வெளியேற்று நிலையம், 20 ஆண்டுக்கு மேலாக செயல்படுகிறது. குடிநீர் வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது.சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், காரிய மண்டபம் கட்டும் பணி, இரு தினங்களுக்கு முன் துவங்கியது.ஆனால், குடிநீர் வாரியத்தில் முறையாக அனுமதி பெறவில்லை. கழிவுநீர் கையாளும் இடத்தில் காரிய மண்டபம் கட்ட, அப்பகுதிவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, அங்கு காரிய மண்டபம் கட்டுவதை, மாநகராட்சி நிறுத்தியது. அதிகாரிகள் மாற்று இடம் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை