உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர் -- கழிப்பறையில் விழுந்த காவலர் மருத்துவமனையில் அனுமதி

 கிரைம் கார்னர் -- கழிப்பறையில் விழுந்த காவலர் மருத்துவமனையில் அனுமதி

கழிப்பறையில் வழுக்கி விழுந்த போலீஸ் புதுப்பேட்டை : புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் வினோத்குமார், 38, நேற்று அதிகாலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவசர உபாதை கழிப்பதற்காக, அருகே உள்ள பாரதியார் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் இடுப்பில் காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 'காபி ஷாப்'பில் தீ: சாதனங்கள் நாசம் ராயப்பேட்டை: அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசாவில் தரை தளத்தில், 'காபே கார்னர்' உள்ளது. நேற்று காலை, கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள், தீயணைப்பானை கொண்டு தீயை அணைத்தனர். எனினும், மரத்தால் ஆன பொருட்கள், மின் சாதனப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ஆயிரம்விளக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு மது விற்ற 2 பேர் கைது அடையாறு: அடையாறு, கார்னெட் சந்திப்பில், வெளிநாட்டு மதுபானங்களை விற்ற மயிலாப்பூரைச் சேர்ந்த வீரமணிகண்டன், 48, இளஞ்செழியன், 54, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர். இவர்கள், வெளிநாட்டில் இருந்து சென்னை வருவோரிடம், மதுபாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 34 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீடு புகுந்து 5 சவரன் நகைகள் திருட்டு சித்தாலப்பாக்கம்: வேளச்சேரி அடுத்த சித்தாலப்பாக்கம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த அம்புலி நம்பி. வெளியூரில் இவர் வசிக்கும் நிலையில், இவரது வீட்டின் கதவு நேற்று முன்தினம் உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து சென்றபோது, வீட்டின் மூன்று பீரோக்களும் உடைக்கப்பட்டு, 5 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது. பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி