உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதமடைந்த பிரதான குழாய் தினசரி வீணாகும் குடிநீர்

சேதமடைந்த பிரதான குழாய் தினசரி வீணாகும் குடிநீர்

செங்குன்றம், செங்குன்றம் ஜி.என்.டி., சாலையோரம், 40 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் சேதமாகியுள்ளது. இந்த குழாய் மூலம், புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் செல்கிறது.கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக, செங்குன்றம் மசூதி அருகே குழாயில் சேதம் ஏற்பட்டு, தினமும் மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி சேறும் சகதியாக மாறியுள்ளது.இது குறித்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை