உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேதமடைந்த மின்கம்பம் அதிரடியாக மாற்றம்

சேதமடைந்த மின்கம்பம் அதிரடியாக மாற்றம்

மடிப்பாக்கம்,பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், பாலைய்யா கார்டனில் உள்ள பிருந்தாவன் தெரு போக்குவரத்து நிறைந்தது. உள்ளகரம் பகுதியில் உள்ள பல்வேறு நகர்களைச் சேர்ந்தோர், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில், இச்சாலை வழியாக தினமும் சென்று வருகின்றனர்.இச்சாலையின் மையப்பகுதியில் இருந்த மின்கம்பம், பல மாதங்களுக்கு முன் உடைந்து விரிசலுடன் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் இருந்ததால், அவ்வழியாக செல்வோர் அச்சப்பட்டனர்.இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அடுத்த சில மணி நேரத்தில், மின் வாரியத்தினர் துரிதமாக செயல்பட்டு, புதிய மின்கம்பத்தை மாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை