உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயிலாப்பூர் மேம்பாலம் இடிப்பு பணி துவக்கம்

மயிலாப்பூர் மேம்பாலம் இடிப்பு பணி துவக்கம்

மயிலாப்பூர்:மெட்ரோ ரயில் பணி காரணமாக, மயிலாப்பூரில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்கும் பணி துவங்கியது.சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் பணியில் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதன் ஒருகட்டமாக, மயிலாப்பூரில் இரண்டு மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.சுரங்கப்பாதை அமைப்பதற்காக, இந்த மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில், மயிலாப்பூரில் பஞ்சாப் நேஷனல் வங்கி, திரு.வி.க. தெரு அருகிலுள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. 'பொக்லைன்' உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு மேம்பாலத்தை இடிக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ராயப்பேட்டையில் இருந்து மயிலாப்பூருக்கும், மந்தைவெளியில் இருந்து மயிலாப்பூருக்கும், இந்த மேம்பாலம் வழியாகத் தான் வர முடியும்.இதைத் தவிர்த்து மயிலாப்பூருக்கு வர வேண்டும் என்றால், குறுகிய சந்துக்கள் வழியாகத் தான் வர முடியும்.இதனால், போக்குவரத்து போலீசார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ