பழைய கழிப்பறைகள் இடிப்பு
திருவான்மியூர்,:அடையாறு மண்டலம், 177வது வார்டு, விஜயநகரில், 2000ம் ஆண்டு மற்றும் 180வது வார்டு, திருவான்மியூர், திருவீதியம்மன் கோவில் தெருவில், 1992ம் ஆண்டு கட்டிய கழிப்பறைகள் உள்ளன.இரண்டு கழிப்பறைகளும், மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், இரண்டு கழிப்பறைகளையும் இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கழிப்பறை கட்ட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.