உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கபாலீஸ்வரர் கோவிலில் காலணி அறை அகற்றம் அறநிலையத்துறை விளக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் காலணி அறை அகற்றம் அறநிலையத்துறை விளக்கம்

சென்னை :மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் காலணி பாதுகாப்பு அறை பற்றாக்குறையால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக நமது நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.இது தொடர்பாக அறநிலையத்துறை அளித்துள்ள விளக்கம்:மயிலாப்பூர், கபாலீஸ்வரர் மேற்கு கோபுரம் அருகே ஒரு சிறிய காலணி பாதுகாப்பு அறை இருந்தது. அது மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது. கோவில் மேற்கு கோபுரத்தை ஒட்டி திருக்குளம் அமைந்துள்ளது. அவற்றின் இடைவெளி மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் சுவாமி தீர்த்தவாரி திருக்குளத்தில் நடைபெறுவது வழக்கம். சுவாமி புறப்பாடு மற்றும் தீர்த்தவாரிக்கு மிகவும் இடையூறாக உள்ள மேற்கு கோபுரத்தை ஒட்டியுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.கோவில் மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள கட்டடங்களால் கோவிலின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்பட்டது. இதன் காரணமாக காலணி பாதுகாப்பு அறை அகற்றப்பட்டது. கிழக்கு ராஜகோபுரம் அருகே ஒரு காலணி பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இது, பக்தர்கள் அனைவருடைய காலணிகளையும் பாதுகாக்கும் வகையில் போதுமான இட வசதியுடன் அமைந்துள்ளது.பூனைகளுக்கு கோவிலின் வெளியே உணவு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணியாளர்களை கொண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ