மேலும் செய்திகள்
ஆசிய சர்பிங் போட்டியில் அசத்தும் வீராங்கனைகள்...
01-Aug-2025
சென்னை. சர்வதேச அளவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் அரை யிறுதி போட்டிக்கு, சென்னையின் தியா ரமேஷ் தகுதி பெற்றார். அகில இந்திய டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், சர்வதேச அளவில், ஐ.டி.எப்., ஜூனியர் டென்னிஸ் கோப்பை போட்டி, நுங்கம் பாக்கம், எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் நடக்கிறது. இதன் அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில், இந்திய வீரர்கள் பார்த்தசாரதி அருண் முந்தே, ஐஸ்வர்யா ஜாதாவும் மோதினார். பார்த்தசாரதி அருண் முந்தே 7 - 5, 7 - 6 என்ற செட் கணக்கில், ஐஸ்வர்யா ஜாதவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அடுத்த போட்டியில், சென்னையின் தியா ரமேஷ், உத்தராகண்டின் தியா சவுத்ரியை எதிர்த்து மோதினார். இதில், அசத்தலாக விளையாடிய தியா ரமேஷ், 6 - 0, 6 - 1 என்ற செட் புள்ளியில், தியா சவுத்ரியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் இன்று தியா ரமேஷ், பார்த்தசாரதி அருண் முந்தேவை எதிர்த்து மோத உள்ளார்.
01-Aug-2025