உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் மாங்காடு அடுக்குமாடி குடியிருப்பில் உற்சாகம்

தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் மாங்காடு அடுக்குமாடி குடியிருப்பில் உற்சாகம்

குன்றத்துார்:'தினமலர்' நாளிதழ் மற்றும் 'கிரேஸ் சூப்பர் மார்க்கெட்' சார்பில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, 'கார்னிவெல் -அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியை, 'சிம்ஸ் மருத்துவமனை, கிட்டீ பட்டீ, தனிஷ்க் ஜுவல்லரி, நிசான் ஆட்டோ ரிலே, மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், பூர்விகா' ஆகியோர் இணைந்து நடத்தினர்.மக்களின் வரவேற்பையடுத்து, சென்னையில் பல்வேறு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது.அந்த வகையில், சென்னை அருகே மாங்காட்டில் உள்ள,'அல்டிஸ் ஆஷ்ரயா' அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று காலை முதல் மாலை வரை 'தினமலர் கார்னிவெல் அப்பார்ட்மென்ட்' கொண்டாட்டம் நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது.இதில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், குடும்பத்தினருடன் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்பு வளாகமே, விழாக்கோலம் பூண்டது.இந்நிகழ்வில் கோலப்போட்டி, சமையல், உறியடி, மினிமாரத்தான், பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. சிறுவர்கள் விளையாடுவதற்கு டாய் ரயில், இயந்திர காளை, ஜம்பிங் பலுான், கேலி சித்திரம், ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். அனைத்துவித போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

'தினமலர்' சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, மிக சிறப்பாக இருந்தது. இதுபோல் ஆண்டுதோறும், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தால் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தோம்.

- -எஸ்.பி.உமையாள், குடியிருப்புவாசி.

காலை முதல் இரவு வரை இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் குடும்பத்துடன் பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தோம். பெண்கள் கோலம், சமையல் போட்டியில் பங்கேற்றும், பாடல் பாடியும் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். சிறுவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றும், நடனமாடியும் தங்கள் திறமையை காட்டினர்.

-- சி.பி.கிரிஷ்குமார், அடுக்குமாடி குடியிருப்புவாசி.---

போட்டியில் குடியிருப்புவாசிகள் எழுதிய,'ஸ்லோகம்'

* வெறும் தாள் என்று நினைத்தாயோ என்னை; இங்கே இருப்பது செய்திகளின் பண்ணை; காப்பேன் பல இடையூறுகளிலிருந்து உன்னை; -தினமலர்.* செய்திகள் உண்மைத் தன்மை கொண்டவை; படிக்கும் போதே உற்சாகத்தை தரும் செய்தித்தாள் ஒன்று தான், தினமலர்.* உலகம் முழுதும் நம்பிக்கையான செய்தி தருவது 'தினமலர்'.* உண்மையான செய்திகளுக்கான உங்கள் நம்பிக்கைக் குரல்- 'தினமலர்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

எவர்கிங்
அக் 08, 2024 00:10

இடிந்து விழுந்து நாசமாகட்டும்...... அப்போதாவது விடியல் தீராவிஷ மாடல் பிறக்குமா எனப் பார்ப்போம்!


புதிய வீடியோ