உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலம்பரைக்குப்பத்தில் ஷூட்டிங் மீனவர்களுக்கு இடையே தகராறு

ஆலம்பரைக்குப்பத்தில் ஷூட்டிங் மீனவர்களுக்கு இடையே தகராறு

செய்யூர் செய்யூர் அடுத்த ஆலம்பரைக்குப்பம் கிராமத்தில், ஊத்துக்காட்டம்மன் மற்றும் தண்டுமாரியம்மன் பகுதிகள் உள்ளன. இரண்டு பகுதியினர் இடையே, பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.சில ஆண்டுகளுக்கு முன், ஊத்துக்காட்டம்மன் பகுதியில் உள்ள ஆலம்பரைக்கோட்டை பகுதியில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, காவல் துறை சார்பாக ஆலம்பரைக்கோட்டை பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் ஊத்துக்காட்டம்மன் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 38, என்பவர், நான்கு நபர்களை ஆலம்பரைக்கோட்டை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.தண்டுமாரியம்மன் பகுதியைச் சேர்ந்த ஜலேந்திரன், 45, என்பவர், சம்பவ இடத்திற்கு சென்று, 'ஏன் ஷூட்டிங் எடுக்க அனுமதித்தாய்?' என, ரஞ்சித்திடம் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை