மேலும் செய்திகள்
37 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
1 hour(s) ago
ஓய்வூதியம்கோரி உண்ணாவிதரம்
1 hour(s) ago
சென்னை, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான செஸ் போட்டி, 20ம் தேதி, பூந்தமல்லியில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லுாரியில் துவங்குகிறது. இதில், ஏழு வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ - மாணவியருக்கு, தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.இறுதி நாளான 21ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தின் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், கார்த்திகேயன் முரளி, வைஷாலி மற்றும் வர்ஷினி ஆகியோரை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்க எந்த கட்டணமும் கிடையாது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்க விரும்புவோர், https://sportiko.in/tvlr/pages/signup.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, 94447 51432 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர் பலராமன் தெரிவித்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago