மேலும் செய்திகள்
ஆவடியில் 4 இன்ஸ்., இடமாற்றம்
1 minutes ago
செய்திகள் சில வரிகளில்
3 minutes ago
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
6 minutes ago
சென்னை: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் செயல்படுவதாகக் கூறி, அவரைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மாவட்ட செயலர் பாலகங்கா, கே.பி.கந்தன், விருகை ரவி, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், ராஜேஷ், வி.எஸ்.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஜெயகுமார் பேசியதாவது: இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என, பல காலமாக தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தி வருகிறோம். இறந்தவர்களை நீக்குவதுடன், ஓட்டுரிமை இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுதான் ஜனநாயகம். இறந்தவர்கள், வீடு மாறியவர்களின் ஓட்டுகளை, தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போட்டு வந்தனர். ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க.,வுக்கு கைகொடுக்கும் ஒரே ஆயுதம் இதுதான். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டவர்களை பிடித்துக் கொடுத்ததற்காக, என் மீது பொய் வழக்கு போட்டனர். கள்ள ஓட்டை நம்பி இருப்பதால்தான் தி.மு.க.,வுக்கு, வாக்காளர் சிறப்பு திருத்தமான எஸ்.ஐ.ஆர்., கசக்கிறது. ஒரு பக்கம் ஒப்புக்கு எஸ்.ஐ.ஆரை எதிர்த்து விட்டு, மறுபக்கம், கட்சிக்காரர்களை களம் இறக்கி விட்டு, தீவிரமாக தி.மு.க., கவனம் செலுத்துகிறது. தி.மு.க., மாவட்டச் செயலர் போல, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் செயல்படுகிறார். சென்னையில் உள்ள இரண்டு அமைச்சர்களின் பேச்சை கேட்டு, துாய்மை பணியாளர்கள், எழுதப் படிக்க தெரியாதவர்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக மாநகராட்சி கமிஷனர் நியமித்துள்ளார். அவர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவத்தை நிரப்ப தெரியவில்லை. எஸ்.ஐ.ஆரின் நோக்கத்தை சிதைக்கும் வகையில், தி.மு.க., செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அனைத்து கலெக்டர்களுக்கும் தி.மு.க., அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago