உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு

தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு

விருகம்பாக்கம்:விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க., பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க., பாக முகவர்கள், பாக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், கே.கே.நகர் 80 அடி சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், பகுதி செயலர் மற்றும் 129வது வார்டு கவுன்சிலர் ராசா, 137வது வார்டு கவுன்சிலர் தனசேகர், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 127வது வார்டு கவுன்சிலர் மற்றும் வட்ட செயலரான லோகு என்பவர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து கவுன்சிலர் தனசேகர் கேள்வி எழுப்பினார்.இதற்கு, கவுன்சிலர் லோகுவின் தம்பியான, 127வது வார்டு தி.மு.க., இளைஞர் அணி பொறுப்பிலுள்ள பொன்சேகர் மற்றும் 127வது வார்டு வட்ட துணை செயலர் வெங்கடேஷன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், எம்.எல்.ஏ., பிரபாகர ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.அப்போது, அருகில் இருந்த பகுதி செயலர் மற்றும் 129வது வார்டு கவுன்சிலர் ராசா,'வரவில்லை என்றால் கேட்கத் தான் செய்வர்' எனக் கூறியுள்ளார்.இதனால், இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், அசிங்கமாக பேசி தகராறு செய்தனர். இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் தகராறு தேர்தல் பணியை பாதிக்கும் என, கட்சி நிர்வாகிகள் புலம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை