| ADDED : ஜன 31, 2024 12:14 AM
திடீர் பரபரப்பு :மாமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, ஆவடி திருவள்ளுவர் நகர் துளசி தெருவில் வசித்து வரும் கணேஷ் என்பவர், என் மகனை பள்ளியில் நாய் கடித்து விட்டது. அது குறித்து புகார் கூற வேண்டும் எனக் கூறி கூட்ட அரங்கில் நுழைய முயற்சித்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆவடி மாநகர நல அலுவலர் மரு.ம.யாழினி வெளியே வந்து பாதிக்கப்பட்டவரிடம் புகாரை பெற்றுக் கொண்டார்.அந்த புகாரில் கணேஷ் கூறியிருந்ததாவது:ஆவடி, திருவள்ளுவர் நகர், துளசி தெருவில் வசிக்கும் கணேஷ் மகன் தேஜஸ்வன், 9. மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளியின் உடற்கல்வி நேரத்தில், என் மகன் சக மாணவர்களுடன் 'கண்ணாம் பூச்சி' விளையாட்டு விளையாடும் போது, பள்ளிக்குள் சுவர் ஏறி குதித்து வந்த தெரு நாய் ஒன்று துரத்தி சென்று, பின் தொடையில் கடித்துள்ளது. இதனால் அவன் காயமடைந்து முட்டியில் காயம் ஏற்பட்டது. தகவலின்படி, மகனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். எனவே நாய் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.