உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரில் இறந்து கிடந்த ஓட்டுநர்

காரில் இறந்து கிடந்த ஓட்டுநர்

சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில் 'டாஸ்மாக்' கடை அருகே, காரில் ஓட்டுநர் நீண்ட நேரமாக உறங்கி கொண்டிருந்தார்.சந்தேகமடைந்த பகுதிவாசிகள், நேற்று மாலை சைதாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்தபோது, அவர் இருக்கையில் உயிர் இழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதற்கட்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த மணிமாறன், 40, என தெரிந்தது.சென்னையில் தங்கி வாடகை கார் ஓட்டும் இவர், நேற்று அதிகாலை காரை சாலையோரம் நிறுத்தி இருக்கையில் துாங்கினார்.மாரடைப்பில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை