மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து இரு எருமை மாடுகள் பலி
1 minutes ago
தங்கையை வெட்டிய அண்ணன் கைது
34 minutes ago
சேலையூர்: சேலையூர் அருகே வீடு கட்டி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றியதால் மனமுடைந்த முதியவர், மரண வாக்குமூலம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராயல் என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் ராம்குமார், 63. வீட்டு உரிமையாளருக்கு, கடந்த 6 மாதங்களாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது. மொபைல் போனில் தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால், நவ., 15ம் தேதி, இவரது வீட்டிற்கு உரிமையாளர் சென்றார். அப்போது, மின் விசிறியில் துாக்கிட்டு ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், ராம்குமார், டைரியில் மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதில், சதீஷ் பீட்டர் என்பவரிடம், வீடு கட்டி கொடுக்க ஒப்பந்தம் செய்து, 13 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்தேன். ஆனால், வீடு கட்டி தராமல் ஏமாற்றி வந்தார். பல முறை பணம் கேட்டபோது, 10,000 மற்றும் 5,000 ரூபாய் பணத்தை, 'ஜிபே' எனும் பணம் செலுத்தும் மொபைல் போன் செயலி வழியாக சதீஷ் பீட்டர் அனுப்பினார். மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார். அந்த மன வருத்தத்தில் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தனக்கு தர வேண்டிய, 12.85 லட்சம் ரூபாயை வசூல் செய்து, இரண்டு முதியோர் இல்லத்திற்கு கொடுக்குமாறும், தனது உடலை யாரிடமும் ஒப்படைக்காமல், அரசு மருத்துவமனைக்கு ஆராய்ச்சிக்கு தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
1 minutes ago
34 minutes ago