மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
சென்னை, தமிழக பா.ஜ., சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி நுாற்றாண்டு விழா, சென்னை அடையாறில் நேற்று நடந்தது. இதையொட்டி, ஒரு லட்சம் பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இணைக்கும் நிகழ்வை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்தார்.அப்போது, அண்ணாமலை பேசுகையில், ''இந்தியாவில் எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் வாஜ்பாய். அடுத்தடுத்து இரண்டு அணு குண்டு சோதனைகளை நடத்தினார். மாற்று சிந்தனையுள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து, 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். ''இதுதான் தங்களுக்கான அடுத்த பொறுப்பு என்பது பா.ஜ.,வில் யாருக்கும் தெரியாது. திடீரென கவர்னராகவும் அறிவிக்கப்படுவர்,'' என்றார்.விழாவில், தமிழக பா.ஜ., முன்னணி நிர்வாகிகள் தமிழிசை, ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
26-Nov-2024