உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துறைமுக விரிவாக்கத்திற்கு விலக்கு

துறைமுக விரிவாக்கத்திற்கு விலக்கு

சென்னை, காசிமேடு பகுதியில் பிரதான மீன்பிடி துறைமுகம் செயல்படுகிது. இதை விரிவாக்கம் செய்யும் திட்டம் மீன் வளத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, ஆய்வு செய்த கடலோர மண்டல மேலாண்மை குழுமம், உரிய துறைகளிடம் இருந்து கட்டுமான திட்ட அனுமதி பெற வேண்டிய தேவை உள்ளதா என்பதை கேட்டு தெரிவிக்க அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் சி.எம்.டி.ஏ.,விடம் மீன் வளத்துறை விண்ணப்பித்தது. மத்திய அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில், காசிமேடு மீன்பிடி துறைமுக விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு திட்ட அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி