| ADDED : டிச 06, 2025 05:17 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேடலுக்கு உதவும் வகையில், 'நம்ம சென்னை பிராப்பர்டி பேர்' என்ற பெயரில் வீட்டுவசதி கண்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின், 100க்கும் மேற்பட்ட திட்டங்களின் விபரங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு வாங்குவோர், முதலீட்டாளர்கள் இதை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது. இங்கு, ஐந்து லட்சம் ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரை, பல்வேறு விலைகளில் வீடு, மனை திட்ட விபரங்கள் கிடைக்கும். மேலும், மேம்பாட்டளர்கள் நேரடியாக மக்களுக்கு திட்டங்களை விளக்குவதுடன், சம்பந்தப்பட்ட திட்டத்தை நேரடியாக பார்வையிடவும் வசதி செய்கின்றனர். நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, மக்கள் பார்வையிடலாம். கனவு இல்லத் துக்கான தேடலில் இருப்போருக்கு, இந்த கண்காட்சி சிறப்பான வாய்ப்பாக அமையும். 'ஐ அட்ஸ் மற்றும் ஈவென்ட்ஸ்' நிறுவனத்துடன், அபி எஸ்டேட்ஸ் இணைந்து, இக்கண்காட்சியை நடத்துகின்றன.