மேலும் செய்திகள்
போலி லோகோவில் கூல்டிரிங்ஸ் தயாரித்த பெண் கைது
06-Jun-2025
சென்னை, முன்னணி பிராண்டுகள் பெயரை பயன்படுத்தி விற்கப்பட்ட, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, போலி கிருமிநாசினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை விற்பனை செய்பவர்களை கண்காணித்து, புகார் செய்யும் இ.ஐ.பி.ஆர்., தனியார் நிறுவனத்தின் மேலாளர் மணிமாறன், சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் புகார் அளித்தார்.அதில், 'ரெக்கிட் பென்கிசர், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாபர் ஆகிய முன்னணி பிராண்டுகளின், 'ஹார்பிக், லைசோல்' உள்ளிட்ட கிருமிநாசினி, அறை மற்றும் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பொருட்கள், போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது' என, தெரிவித்திருந்தார்.அதன் அடிப்படையில், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில், சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவினர் சோதனை செய்தனர். அதில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அனில், சாகர்பரவாடியா ஆகியோர், போலி தயாரிப்புகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.விசாரணையில், கிருமிநாசினி மற்றும் அறை சுத்தம் செய்யும் திரவங்களை, சில ரசாயனங்களை சேர்த்து போலியாக தயாரித்து முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் பாட்டில்களில் அடைத்து விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.இருவரையும் கைது செய்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி கிருமிநாசினியை பறிமுதல் செய்தனர்.போலி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை, gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-Jun-2025