உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளுக்கு தொல்லை தந்தை கைது

மகளுக்கு தொல்லை தந்தை கைது

பெரம்பூர், பெரம்பூரை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். பெண்ணின் கணவருக்கு மது பழக்கம் உள்ளது. ஓட்டுனர் பணியில் உள்ள அவர், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு நவ.,ல் மழை காரணமாக பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த மூத்த மகளுக்கு, மது போதையில் தந்தையே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜன.1ம் தேதி மீண்டும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து தன் பாட்டியிடம் சிறுமி நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் படி, சிறுமியின் தந்தையை புளியந்தோப்பு மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி