உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்டிக்கர் கடையில் தீ விபத்து

ஸ்டிக்கர் கடையில் தீ விபத்து

திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலையில், ஸ்டிக்கர் மற்றும் பெயர் பலகை தயாரிக்கும் 'யு.வி.சைன் டிஜிட்டல் டிசைன்' என்ற கடை இயங்கி வருகிறது. சங்கர் என்பவர், 15 ஆண்டுகளுக்கு மேல் கடையை நடத்தி வருகிறார். நேற்று காலை, கடையில் இருந்து கரும்புகை வெளியானதால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில், 20 லட்சம் மதிப்புள்ள 'ஸ்டிக்கர்' தயாரிக்கும் இயந்திரம் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை