உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இடி தாக்கி மீனவர் வீடு சேதம்

 இடி தாக்கி மீனவர் வீடு சேதம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் குப்பம் அடுத்த அப்பர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்; மீனவர். இவரது மனைவி சுனிதா. நேற்று அதிகாலை, தங்களது ஓட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இடி - மின்னலுடன் கனமழை பெய்துக் கொண்டிருந்த நிலையில், பலத்த சத்தத்துடன் வீட்டின் மீது விழுந்த இடியால், கூரையில் இருந்த ஓடுகள் முழுதும், சுக்குநுாறாக நொறுங்கி கீழே விழுந்தது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக தம்பதிக்கு காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த அ.தி.மு.க., காஞ்சிபுரம் மண்டல தொழில்நுட்ப பிரிவு தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர், வீட்டை இழந்த தம்பதிக்கு ஆறுதல் கூறி, 10,000 ரூபாய் நிவாரணம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ