உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரியை கடத்திய ஐவர் கைது

லாரியை கடத்திய ஐவர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி அருகில் பார்த்தசாரதி, 34, என்பவர் தன் லாரியை நிறுத்தியிருந்தார், கடந்த 8ம் தேதி லாரி மர்ம நபர்களால் கடத்தப்பட்டது.இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்தனர்.இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காரனோடை, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அகஸ்டின், 51, என்பவர் சிக்கினார். விசாரணையில், அகஸ்டின் கூட்டாளிகளுடன் சேர்ந்து லாரியை கடத்தி சென்று, திருச்சியில் முகமது பூட்டோ என்பவரிடம் 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது.அகஸ்டினுக்கு சிறையில் பழக்கமான துாத்துக்குடியைச் சேர்ந்த புரோக்கர் பாரதிராஜா, 35, திருச்சி, ஆழ்வார்நகரைச் சேர்ந்த முகமது பூட்டோ, 36, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த புரோக்கர் சுரேஷ் ராஜன், 58, சைதாப்பேட்டையைச் சேர்ந்த புரோக்கர் வெங்கடேஷ், 35, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.அனைவரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ