உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கத்திற்கு இலவச மினி பஸ் வசதி

கிளாம்பாக்கத்திற்கு இலவச மினி பஸ் வசதி

சென்னை,சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில், பயணியருக்கான வசதிகள் குறித்து, அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். பின், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கம் துவங்கி உள்ளது. வழக்கமாக நாள்தோறும், 2,000 பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், பெங்களூரு செல்லும் பேருந்துகள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கின்றன.இந்த பேருந்துகளை தவிர, மற்ற பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து புறப்பட்டுச் செல்லும். மக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம் வந்து செல்கின்றன.அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தே முழுதுமாக இயக்கப்படுகின்றன.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிற்றுந்துகளில் இலவசமாக அழைத்து வந்து, வெளியூர் பேருந்துகள் இருக்கும் இடத்தில் பயணியரை இறக்கி விடுவதற்கான ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை