உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

அண்ணா நகர், அமைந்தகரையில் இயங்கி வரும் எம்.ஆர்., மருத்துவமனை சார்பில், அண்ணா நகரில் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க., - எம்.பி., கலாநிதி, முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்றோருக்கு பழம், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. அண்ணா நகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.நிகழ்வில், அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன், மண்டல குழுத்தலைவர் ஜெயின், மருத்துவமனையின் நிறுவனர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்