| ADDED : நவ 25, 2025 04:21 AM
கண்ணகி நகர்: நல வாரியத்தில் சேர்ந்த, 192 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, முழு உடல் பரிசோதனை செய்து, சீருடை வழங்கப்பட்டது. கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையம் சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களை நல வாரியத்தில் சேர்க்கும் இரண்டு நாள் முகாம் நடந்தது. இதில், 170 ஆண்கள், 22 பெண்கள் என, 192 ஆட்டோ ஓட்டுநர்கள் வாரியத்தில் சேர்ந்தனர். அவர்களுக்கான உரிமை, சலுகை குறித்து, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு விளக்கினார். இதில் பங்கேற்ற அனைத்து ஓட்டுநர்களுக்கும், முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. சீருடையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.