| ADDED : மார் 14, 2024 12:27 AM
தாம்பரம் மாநகராட்சி, 50வது வார்டு, ரங்கநாதபுரம் ஐந்தாவது தெருவில், பழமையான பொது கிணறு உள்ளது. இக்கிணற்றில் இருந்து ரங்கநாதபுரம் பகுதிக்கு குழாய் அமைத்து, வீடுகளுக்கு தினமும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. துணிகள் துவைக்க, பாத்திரம் கழுவ, இந்த தண்ணீர் பயன்படுகிறது.கிணற்றை முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. பிளாஸ்டிக், குப்பை உள்ளிட்ட பொருட்கள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரின் நிறம் மாறிவிட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தினால், தோல் அரிப்பு ஏற்படுகிறது. கிணற்றை சுத்தம் செய்து, மூடி அமைத்து பராமரிக்க வேண்டும்.- ரங்கநாதபுரம் மக்கள்