உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொன்மார் பிரின்ஸ் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

பொன்மார் பிரின்ஸ் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

சென்னை, சென்னை அடுத்த பொன்மாரில், பிரின்ஸ் ஸ்ரீ பாலாஜி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இதன் முதல் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி, வெற்றி பெற்று, தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் உள்ளவர்களுடன் இணைந்து உழைத்தால், சாதனைகளை படைக்க முடியும்.புதிய நல்ல முயற்சிகளை மேற்கொள்ள அச்சப்பட்டால், அது உங்களை மட்டுமல்ல, தேசத்தின் வளர்ச்சியையும் தடுக்கும்.நம் தாய் மொழியிலும், அரசு பள்ளியிலும் பயில, மாணவர்கள் தயங்க கூடாது. இந்திய விண்வெளி பயணத்தில் வெற்றிக்கு உழைத்தவர்களில், 90 சதவீதம் பேர் தாய் மொழியில் படித்தவர்கள் தான். இத்துறையில் மாணவியரும் கவனம் செலுத்த வேண்டும்.நேற்று இருந்த பல வேலை வாய்ப்புகள் இன்று இல்லை. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, தகுதியை வளர்த்து கொண்டு, புதிய யுக்திகளை கையாண்டால் மட்டுமே, நீடித்து நிலைத்திருக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் விஷ்ணுகார்த்திக், பிரசன்னா வெங்கடேஷ், செயலர் ரஞ்சினி, முதல்வர் தனவந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை