உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மனைவியை தாக்கிய கணவர் கைது

 மனைவியை தாக்கிய கணவர் கைது

கோயம்பேடு: கோயம்பேடு, பாரதியார் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் கருப்புசாமி, 48; கோயம்பேடு சந்தையில் மூட்டை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி வாசுகி, 42; வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் இல்லை என கூறவே, வங்கியில் கடன் பெற்று பணம் தரும்படி, கருப்புசாமி கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கருப்புசாமி, மூட்டை துாக்குவதற்கு பயன்படுத்தும் இரும்பு கொக்கியால், மனைவி வாசுகியின் முதுகில் கிழித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டன. கோயம்பேடு போலீசார் கருப்புசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை