உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரேஸில் ஈடுபட்டால் காப்பு நிச்சயம்

 ரேஸில் ஈடுபட்டால் காப்பு நிச்சயம்

ஆவடி: பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையின் கீழ், ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், புறக்காவல் மையம் நேற்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் கமிஷனர் சங்கர் கூறியதாவது: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள 20 புறக்காவல் நிலையங்களில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்து, 'ஈவ் டீசிங்' போன்றவற்றை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ