உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் ஒருவர் படுகொலை குடும்பத்தினர் மூவருக்கு வெட்டு

ஆவடியில் ஒருவர் படுகொலை குடும்பத்தினர் மூவருக்கு வெட்டு

ஆவடி, ஆவடி அடுத்து அண்ணனுாரைச் சேர்ந்தவர் மாதவன், 65; கப்பல் மெக்கானிக். இவரது மனைவி சியாமளா, 45. இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ப்ரோமோனிகா, 19, ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் 7ம் வகுப்பு படிக்கிறார். இவர்களுடன் மாமியார் விஜிமோனி, 75, தங்கியுள்ளார்.நேற்று இரவு, இவரது வீட்டில் நுழைந்த மர்மநபர் ஒருவர், கத்தியால் மாதவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாதவன் உயிரிழந்தார். இதை தடுக்க முயற்சித்த போது, மனைவி சியாமளா, மாமியார் விஜிமோனி மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் மகளும் வெட்டு பட்டுள்ளனர். 'மங்க்கி குல்லா' போட்ட மர்மநபர் ஒருவரே கொலை செய்து தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.மாதவனின் உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை