உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நல்ல தண்ணீர் குளம் துாய்மையாகுமா?

நல்ல தண்ணீர் குளம் துாய்மையாகுமா?

பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம், பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி, நல்ல தண்ணீர் குளம் உள்ளது. சில ஆண்டுகளாக இதன் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.குப்பை, கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி வந்து குளத்தில் வீசி செல்கின்றனர். மற்றொரு புறம், குளத்தை சுற்றி போடப்பட்ட கம்பி வேலி கழன்று விட்டதால், இரவில் வாகன ஓட்டிகள் வழி தவறி குளத்தில் விழும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.தண்ணீரில் மிதக்கும் கழிவுகளை சுத்தம் செய்து சீமை கருவேல மரங்களை அகற்றி, சுற்றிலும் சுவர் அமைத்தால், குளம் பாதுகாக்கப்படும். மக்களும் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும்.குளத்தில் அல்லி தாமரை பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து, இயற்கை சூழ்ந்த இடமாகவும் மாறும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் வைத்து, குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை