உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவருக்கு சிறை

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவருக்கு சிறை

ஸ்ரீபெரும்புதுார், மண்ணுாரில், காயலான் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை, போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்சன், 49. இவர், பெரம்பாக்கம் - தண்டலம் நெடுஞ்சாலையில், மண்ணுார் கூட்டு சாலை அருகே, காயலான் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த மர்ம நபர், கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார்.இது குறித்து ஜான்சன், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தார்.புகாரின்படி விசாரித்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரெட்டிகுளம் கிரீன் சிட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 21, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ