மேலும் செய்திகள்
பரவலான மழை, கிருஷ்ணா நீர் வரத்து
29-Sep-2024
கண்டலேறு அணையில் கிருஷ்ணா நீர் திறப்பு
22-Sep-2024
ஊத்துக்கோட்டை, அக். 1---கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 324 கன அடி வீதம் கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியே தமிழகத்திற்கு வருகிறது.சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, கடந்த 19ம் தேதி திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், 22ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 'ஜீரோ பாயின்டை' அடைந்தது.துவக்கத்தில் வினாடிக்கு, 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், பின்னர், 1,300 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 324 கன அடி வீதம், தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 290 கன அடி வீதமும், மழைநீர், 40 கன அடி என மொத்தம், 330 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.அங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக, புழல் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், 0.166 மில்லியன் கன அடி நீர் உள்ளது. தற்போதைய நீர்மட்டம், 18.95 அடியாக உள்ளது.
29-Sep-2024
22-Sep-2024