உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வென்ற வீரருக்கு பாராட்டு

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வென்ற வீரருக்கு பாராட்டு

சென்னை, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வென்ற தமிழக வீரர் பிரித்வி சேகரை, ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா பாராட்டினார்.சென்னை ஐ.சி.எப்.,பில் கணக்காளராக பணியாற்றுபவர் பிரித்வி சேகர். இவர் செவித்திறன் குன்றியோர் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.மேலும், இரட்டைர் பிரிவில் இரண்டாவது இடமும் பெற்றார். இவர் ஏற்கனவே பிரேசிலில் நடந்த காதுகேளாதோர் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்றவர். இவரை சென்னை ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா பாராட்டி, வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை