உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

திருநின்றவூர்,திருநின்றவூரை அடுத்த நத்தமேடு, மாருதி நகரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 22 ; கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம், திருநின்றவூர், பெரியார் நகரில் உள்ள கட்டடத்தில், 'செப்டிக் டேங்க்' சுற்றி மண் அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்.மதியம் உணவு சாப்பிடுவதற்காக, கை, கால்களில் உள்ள சேற்றை கழுவ சென்றார். ஈர கையுடன் மோட்டார் வயரில் தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து இறந்தார்.திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விக்னேஸ்வரனுக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை