உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூடைப்பந்தில் லேடி சிவசாமி பள்ளி சாம்பியன்

கூடைப்பந்தில் லேடி சிவசாமி பள்ளி சாம்பியன்

சென்னை, பள்ளி கல்வித் துறையின் குடியரசு தின விளையாட்டு போட்டியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, புதுக்கோட்டையில் நடந்தது.இதில், 14 வயதினருக்கான போட்டியில், சென்னை அணியாக மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி பங்கேற்றது. அரையிறுதியில், சென்னை அணி 59 - 46 என்ற கணக்கில் சேலத்தை வீழ்த்தியது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், சென்னை அணி, திண்டுக்கல் மாவட்ட அணிகள் மோதின. இதில், 57 - 46 என்ற கணக்கில் சென்னை மாவட்டம் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்