உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிசியோெதரபி கிளினிக் அமைக்க கடனுதவி

பிசியோெதரபி கிளினிக் அமைக்க கடனுதவி

சென்னை,'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில், உடற்பயிற்சி சிகிக்சை மையமான, 'பிசியோெதரபி கிளினிக்' அமைக்க, மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.இத்துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு அல்லது ஏதேனும் துறையில் பட்டப்படிப்பு முடித்த, 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். தொழிலுக்கு, 6 லட்சம் ரூபாய் திட்டத் தொகை நிர்ணயித்து, அதில், 2.10 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கு www.tahdco.comஎன்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்சி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை