உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மிக்ஜாம் புயலில் பாதித்த நிறுவனங்களுக்கு கடனுதவி

மிக்ஜாம் புயலில் பாதித்த நிறுவனங்களுக்கு கடனுதவி

சென்னை, 'மிக்ஜாம்' புயல் மழை வெள்ளத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அந்நிறுவனங்களின் மறு சீரமைப்பிற்காக நிதியுதவி வழங்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான முகாம்கள், நேற்று துவங்கி நாளை வரை நடக்கின்றன. காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம்கள் நடக்கும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவை துறையில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில், 1 - 3 லட்சம் ரூபாய் வரை, 6 சதவீத வட்டியில் வழங்கப்படும். இத்திட்டம், இம்மாதம் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.இதற்கான முகாம்கள், இன்று ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆர்.வி., டவர்ஸ் இரண்டாவது தளத்திலும், நாளை அம்பத்துார் தொழிற்பேட்டை ஏ.ஐ.இ.எம்.ஏ., விலும், நாளை மறுநாள் வியாசர்படி, இ.எச்., சாலையில் உள்ள 'எப்.1' வணிக வளாகத்திலும் நடக்கின்றன. சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இதை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ