உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி விபத்து இளம்பெண் சீரியஸ்

லாரி மோதி விபத்து இளம்பெண் சீரியஸ்

பூந்தமல்லி, சோழவரம், அருமந்தை பகுதியைச் சேர்ந்தவர் வித்யா, 26; தனியார் மருத்துவமனை ஊழியர். இவர், நேற்று மதியம் ஸ்கூட்டரில், பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றார். ஸ்கூட்டரை, சக ஊழியரான வேளச்சேரியைச் சேர்ந்த மூர்த்தி, 27, என்பவர் ஓட்டினார்.இருவரும் திரும்பி செல்லும்போது, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று, ஸ்கூட்டரில் மோதியது. இதில், வித்யா படுகாயமடைந்தார். மூர்த்தி லேசான காயங்களுடன் தப்பினார். வித்யா, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்