உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதை தெரியாமல் தடுப்பில் மோதிய லாரி

பாதை தெரியாமல் தடுப்பில் மோதிய லாரி

அயனாவரம், ஓட்டேரியில் உள்ள தனியார் நிறுவனத்திற்காக, ராஜஸ்தானில் இருந்து 'மார்பிள்' கற்களை ஏற்றிய லாரி, அயனாவரம் வழியாக நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியை, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ்வார், 26 என்பவர் ஓட்டிவந்தார்.அதிகாலை, 4:30 மணியளவில், பனிமூட்டத்தில் பாதை தெரியாமல், அயனாவரம் -- கொன்னுார் நெடுஞ்சாலையில், நிலை தடுமாறி சாலையின் தடுப்பில் மோதி நின்றது. இதனால், லாரியின் டீசல் டேங்க் உடைந்து, 30 மீ., துாரத்திற்கு டீசல் வழிந்தோடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்தனர்.சம்பவம் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், அவ்வழியாக போக்குவரத்தை தடை செய்து, டீசலில் மணல் கொட்டி சீரமைத்தனர். தடுப்பில் சிக்கிய லாரியை மீட்பதில் சிரமம் இருந்ததால், காலை வரை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.மூன்று மணிநேரம் போராட்டத்திற்கு பின், காலை 7:30 மணிக்கு ஜே.சி.பி., வரவழைத்து லாரியை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை