உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் நகை பறித்த மதுரை நபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த மதுரை நபர் கைது

எம்.ஜி.ஆர்., நகர்:வடபழனி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் சுசீலா, 67. கடந்த 16ம் தேதி, கே.கே., நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு ரத்த மாதிரி கொடுக்க சென்றபோது, அரசு காப்பீடு அட்டை பெற்று தருவதாக கூறி, மூதாட்டியிடம் இருந்து 3 சவரன் தங்க செயின், அரை சவரன் மோதிரைத்தை மர்ம நபர் பறித்து சென்றார்.இதுகுறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையை நுாதனமாக பறித்துச் சென்ற மதுரை மாவட்டம், அரசரடி எல்லிஸ் நகரைச் சேர்ந்த சித்திரைவேல், 46, என்பவரை, திருநெல்வேலியில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதேபாணியில், திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்திலும், வயதான பெண்மணியிடம் 3 சவரன் நகையை சித்திரைவேல் பறித்துச் சென்றதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை